இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் சுமார் 35 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 56,395க்கும் அதிமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்
அவர்களில் 105,159 ரஷ்ய நாட்டவர்கள், 99,147 இந்தியர்கள், 45,108 பிரித்தானியர்கள் என்ற வகையில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.