நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு: நிதியமைச்சு தகவல்
Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Economy of Sri Lanka
By Mayuri
இலங்கையில் கடந்த ஆண்டில் வேலையின்மை வீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 வீதமாக இருந்தது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம்
இரண்டாவது காலாண்டில், அது 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48.6 வீதமாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.