இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்
                                    
                    Sri Lanka Tourism
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Tourism
                
                        
        
            
                
                By Benat
            
            
                
                
            
        
    2025ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு பணியகம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை
இதற்கமைய, ஜனவரி 1 முதல் 19ஆம் திகதி வரை 153,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 27,166 இந்தியர்கள் 22,033 ரஷ்யர்கள் மற்றும் 9,763 பிரித்தானிய பிரஜைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 102,545 ஆகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.