இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோயாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Cancer Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Nov 06, 2024 01:40 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சருமத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும்.

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

தோல் புற்றுநோய்

சருமத்தின் நிறத்தில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் கிரீம் வகைளை பூசாமல் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோயாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Increase In The Number Of Skin Cancer Patients

சருமத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் எமது நாட்டில் உள்ளன. எனவே அவற்றைத் தினமும் உண்ணுங்கள்.

திடீரென உடல் எடை அதிகரித்தால் வைத்தியரிடம் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

வைத்தியரின் ஆலோசனை

தோலில் அரிப்பு, நிறம் மாற்றம், வெடிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்.

இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோயாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Increase In The Number Of Skin Cancer Patients

பல்வேறு கிரீம் வகைகளைச் சருமத்தில் பயன்படுத்துவதனாலும் தோல் புற்றுநோய் ஏற்படலாம். எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றி சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கிரீம் வகைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

சவூதி அரசாங்க ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி

சவூதி அரசாங்க ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW