இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சார இயக்கத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நிரூபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, நாட்டில் இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் 1,084 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழுநோயாளர்கள் அடையாளம்
அதிகளவான தொழுநோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆகும்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்திலிருந்து 113 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,500 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என விசேட வைத்திய நிபுணர் நிரூபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |