இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Colombo
Jaffna
Kalutara
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Laksi
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 41,866 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள்
இந்தநிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் , இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |