வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Colombo
Economy of Sri Lanka
By Dhayani
நாட்டின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 9.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 5.43 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு ஒதுக்கம்
நீடித்து நிலைத்திருக்கும் உறுதிப்பாடு என்ற தொனிப்பொருளில் இலங்கை மத்திய வங்கியில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த மார்ச் மாதம், இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 4.96 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.