அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு!

Ampara Eastern Province Crime
By Laksi Apr 02, 2025 05:14 AM GMT
Laksi

Laksi

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில்  பழுதடைந்த பழ வகைகளின் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பழங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் இவ்வாறு பழுதடைந்த பழ வகைகள் விற்பனை அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக வெள்ளரிப்பழம், வாழைப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம், பப்பாசி, மாதுளம்பழங்கள் போன்ற பழ வகைகள் பழுதடைந்த நிலையிலும் பங்கஸ் தொற்று ஏற்பட்ட நிலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அம்பாறையில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

பழுதடைந்த பழ விற்பனை

இதனால் நுகர்வோர்கள் சுகாதார ரீதியாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் சுகாதார சேவைகள் ஊடாக  திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு! | Increase In Sale Of Spoiled Fruit In Ampara

மேலும் முறையற்ற வகையில் உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் திடீர் களப் பரிசோதனையின் போது விடுதிகள்,  உணவகம், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் பழக்கடை போன்றனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனால் தற்போது மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனை மேற்கொள்ளாததன் காரணமாக இவ்வாறு பழுதடைந்த பழ விற்பனை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே மோதல்

திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே மோதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW