மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலையில் மாற்றம்
நாட்டில் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, மதுபானங்களுக்கான வரியை 6 வீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், 750 மில்லிலீற்றர் சிறப்பு மதுபான போத்தலின் விலை 106 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஏனைய வகை மதுபானங்களின் விலையும் 5 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிகரெட்டுக்களின் விலை
இதேவேளை, இன்று (11.01.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் (Ceylon Tobacco Company) தீர்மானித்துள்ளது.
அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |