டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Mayuri Jul 18, 2024 11:10 AM GMT
Mayuri

Mayuri

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,119 ஆகும்.

சீரற்ற காலநிலை 

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 4,004 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 3,199 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,690 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 2,484 டெங்கு நோயாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 1,321 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Increase In Number Of Dengue Patients

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW