புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் டொலர் வரவு அதிகரிப்பு

Dollar to Sri Lankan Rupee Manusha Nanayakkara Sri Lanka Politician Sri Lankan political crisis Dollars
By Thulsi May 13, 2023 09:31 AM GMT
Thulsi

Thulsi

2023 ஏப்ரல் மாதம் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 454 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.

கடந்த 2022 ஏப்ரலில் 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் அனுப்படும் பணம், 2023 ஏப்ரலில் 454.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் டொலர் வரவு அதிகரிப்பு | Increase In Foreign Worker Remittances

இது கடந்த ஆண்டு 2022 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 82.4% அதிகமாகும்.

அமெரிக்க டாலர்

மேலும் நாட்டிற்கு அனுப்பப்பட்ட தொகை 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தமாக அனுப்பப்பட்ட தொகை 1867.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவித்துள்ளார்.