நாட்டில் மார்பக புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு!
இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோயாளர்கள்
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,நாட்டில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |