ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

By Mayuri Feb 08, 2024 10:46 AM GMT
Mayuri

Mayuri

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை 7,500 ரூபாயாகவும், 2,000 ரூபாயாக இருந்த முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.