அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Ranil Wickremesinghe Government Employee President of Sri lanka
By Fathima May 12, 2024 03:39 PM GMT
Fathima

Fathima

இலங்கையின் (Sri Lanka) பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 3 வீத வளர்ச்சியை பதிவு செய்யுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் (Temple Trees) இன்று (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து, உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதார அபிவிருத்தி

இதன் போது மேலும் தெரிவித்த அவர், “ஏற்றுமதி பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை விரைவான அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நான்கு பிரதான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | Increase Government Employees Salary Hike Ranil

மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கும் மத்திய வங்கிச் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச கடன் முகாமைத்துவ சட்டம், அரச நிதிச் சட்டம், பொருளாதார பரிமாற்றச் சட்டம் உள்ளிட்ட சட்டமூலங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்த புதிய சட்டங்களை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

புதிய சட்டங்கள் 

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்த நாட்டிற்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சகல நிபந்தனைகளும் எதிர்காலத்தில் சட்டமாக கொண்டுவரப்படும். இந்தச் சட்டங்களை நிறைவேற்றுவதிலே நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | Increase Government Employees Salary Hike Ranil

நாடு பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் இருந்த போது, நாட்டை மீட்பதற்காக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை உருவாக்கினோம். இந்த வேலைத்திட்டம் இன்று வெற்றியடைந்து. புதிய சட்டங்களை நிறைவேற்றி நாட்டின் எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

எதிர்காலத்தில் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவான நிதியை ஒதுக்க வேண்டியிருக்கும். புதிய பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக மாத்திமே இதனை செய்ய முடியும்.

அரச ஊழியர்களுக்கான சலுகைகள்

எவ்வாறாவது அரச ஊழியர்களுக்கு முடிந்த அளவு சலுகைகளை வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு சம்பளத்தை அதிகரிப்பது குறித்தும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | Increase Government Employees Salary Hike Ranil

அரச ஊழியர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு 10, 000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தனியார் துறையிலும் தோட்டத் துறையிலும் சம்பளத்தை உயர்த்துவதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் தான் தொடங்கியது.

வங்குரோத்து நிலை

இலங்கையில் தற்போது பணத்தை அச்சிட மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி.

எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து வருகின்றோம். அடுத்ததாக தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

அதன்படி, இந்த ஆண்டு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவோம். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இத்துடன் முடிவடையாது. கடன் தள்ளுபடி செய்தாலும் மிகுதியை மீளச் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

GalleryGalleryGallery