பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Crime General Election 2024
By Laksi Oct 28, 2024 09:13 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 78 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இதுவரையான காலப்பகுதியில் 869 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 265 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 604 முறைப்பாடுகளும், 16 ஏனைய முறைப்பாடுகளும், வன்முறை சம்பவம் தொடர்பில்  1 முறைப்பாடும் பதிவாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு

முறைப்பாடுகள் அதிகரிப்பு

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், வன்முறைச் சம்பவங்கள் 8 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள் | Increase General Election Related Law Violations

மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 723 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 146 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

தேசிய தமிழ் தினப்போட்டியில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் சாதனை

தேசிய தமிழ் தினப்போட்டியில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW