இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Law and Order
By Laksi
இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
குறித்த நிகழ்வானது இன்று (9) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நியமனம்
இதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |