கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் பிர்லியன்ட் பார்க் திறந்து வைப்பு...
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் பூரண அணுசரனையுடன் பாடசாலை முகப்புப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட "BRILLIANT PARK" உத்தியோகபூர்வமாக அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்று (03) பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைசால் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜிம் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளர் எப். நஸ்மியா சனூஸ்,பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ அஸ்தர்,எம்.ஏ சலாம்,உதவி அதிபர் இ.ரினோஸ், கல்முனை பிர்லியன் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எஸ்.எம் பழீல் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு தலைவர் எஸ்.எல் ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி(LLB), பிரிலியன் விளையாட்டுக் கழக முகாமையாளர் எஸ்.எல் பஸ்வாக்,கழகத்தின் உயர்பீட உறுப்பினர்களான சல்மானுல் பாரிஸ்,பி.லுக்மான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையில் கொடியேற்றும் கம்பம் மற்றும் நவீன பார்க் முறைமை இல்லாத குறையினை கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த காலங்களில் இவ் விளையாட்டுக் கழகம் இப்பாடசாலையில் கல்வி மற்றும் பெளதீக சார் வேலைத்திட்டங்களில் முழுமையான முறையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த வேலைத்திட்டம் கடந்த மாதம் 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






