அக்கரைப்பற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு
தேசிய மக்கள் சக்தியின் (npp) அம்பாறை (Ampara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்று அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ (Wasantha Piyathissa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று செயற்பாட்டாளர் அபூ சஹீட் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளனர்.
மக்களின் பிரச்சினைகள்
அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பிரதேச மக்களின் பிரச்சினைகள், தேவைகளை இந்த அலுவலகத்தின் ஊடாக தீர்த்து வைக்கும் நோக்கில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுள ரத்நாயக்க ஆகியோருடன் பொத்துவில் தொகுதி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களான றமீஸ் முஹைடீன் மற்றும் சுல்தான் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |