அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்!
சர்வதேச நாணய நிதியக் குழு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து வியப்படைந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலை
மேலும் கருத்து தெரிவித்த அவர், “வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை ஒரு சில மாதங்களுக்குள் இவ்வாறானதொரு இடத்திற்கு கொண்டு வர முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.
கடனுதவியை திறக்க முடியாமலும், துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலுக்கு பணம் செலுத்த முடியாமலும் தவித்த நா, இன்று நிம்மதியான காற்றை சுவாசிக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான தனது அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் பத்து நாட்களில் முடிவடைந்தது.
டிசம்பர் 31 - ற்கு முன்னர் அவற்றை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |