இம்ரான்கானின் மனநிலையில் சந்தேகம்! சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் சுகாதார அமைச்சர்
Pakistan
Imran Khan
By Fathima
இம்ரான்கானின் மனநிலையில் சந்தேகம் இருப்பதாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்ரான்கானின் உடலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மதுப்பழக்கம், கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
போராட்டத்திற்கு அழைப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ஆதரவாளர்கள் வீதிகளில் இறக்கி போராட வேண்டுமெனவும் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |