இராணுவத்தின் மீது இம்ரான் கான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Pakistan Imran Khan
By Fathima Jun 05, 2023 12:15 AM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான் இராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இது தொடர்பில் இம்ரான் கூறியதாவது,“பாகிஸ்தான் இராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது. இராணுவம் மற்றும் ஐ.எஸ் அமைப்புகள் தனக்கும் தனது கட்சிகளுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

தன் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் தள்ளுவதை அவர்களது நோக்கம்.

இராணுவத்தின் மீது இம்ரான் கான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Imran Khan S Accusation Against The Army

இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் நான் பதவிக்கு வருவதை இராணுவத்தினர் விரும்பவில்லை.

நீதிமன்றங்கள் சரியான முறையில் செயல்பட்டு, நீதி வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இராணுவ நீதிமன்றங்கள் இதற்கு முன்னர் உரிய நடைமுறை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, நிர்ப்பந்திக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றால் வழங்கப்பட்ட மரணதண்டனைகளை உள்ளிட்டவற்றை புறக்கணித்துள்ளது.”என கூறியுள்ளார்.

இம்ரான் கான் சமீபத்தில் கைது

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இராணுவத்தின் மீது இம்ரான் கான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Imran Khan S Accusation Against The Army

இதையடுத்து, அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் பிணை வழங்கியது.

பிணை காலம் முடிவடைந்த நிலையில், மே 23ம் திகதி இம்ரான் கானுக்கு எதிரான 8 வழக்குகளிலும் எதிர்வரும் ஜூன் 8 வரை பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கான் அண்மையில் கைது செய்யப்பட்ட போது, அவரை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.