பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு உயிர் ஆபத்து: மனைவி பரபரப்பு கடிதம்

Pakistan Imran Khan World
By Fathima Aug 20, 2023 08:07 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அங்குள்ள சிறைச்சாலையில் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் பஞ்சாப் மாநில உள்துறை செயலாளருக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"எனது கணவர் இம்ரான் கான் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் எந்த நியாயமும் இல்லை.

ஏனென்றால் அடியாலா சிறைக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இம்ரான் கான் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அவரை அட்டாக் சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு உயிர் ஆபத்து: மனைவி பரபரப்பு கடிதம் | Imran Khan Poisoned In Jail Latest Update

ஊழல் வழக்கு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இதையடுத்து அவர் கூட்டணி ஆட்சியை அமைத்து பாகிஸ்தான் பிரதமரானார்.

முன்னதாக இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த கைக்கடிகாரம், பேனா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக கூறப்படும் வழக்கு இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தன் கணவருக்கு குறித்த சிறைச்சாலையில் ஆபத்து இருப்பதாகவும் அவரை விஷம் வைத்து கொலை செய்ய வாய்ப்புள்ளது என அவரது மனைவி புஷ்ரா பீபி அச்சமடைந்துள்ளார்.