இம்ரான் கான் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி கைது

Pakistan Imran Khan
By Fathima Jun 02, 2023 05:47 PM GMT
Fathima

Fathima

இம்ரான் கானின் கட்சி தலைவர் பர்வேஸ் இலாகி லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாணத்தில் பொலிஸாரின் உதவியுடன் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் பாகிஸ்தானின் பிடிஐ கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி கைது | Imran Khan Party Leader Parvez Ilaki Arrested

உறுதிப்படுத்தல்

இலாஹி நேற்று கைது செய்யப்பட்டதை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் உறுதிப்படுத்தியுள்ளார். 

முன்னாள் பஞ்சாப் முதல்வர் லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கேட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே பர்வேஸ் இலாஹி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.