பாகிஸ்தானிலிருந்து வெளியேற இம்ரான்கான் உட்பட 80 பேருக்கு தடை
இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. கட்டிடம் உட்பட பல இராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 10 பேர் பலியானதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு
இந்த நிலையில் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீவி மற்றும் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்து ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இராணுவ நிலைகளை தாக்கியதால் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |