இம்ரான் கானின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Pakistan Imran Khan Suicide Attack In Pakistan World
By Fathima May 17, 2023 05:32 AM GMT
Fathima

Fathima

பஞ்சாப் மாகாணத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்க கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தாக்கல் செய்த மனு நேற்று (16.05.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இம்ரான் கானின் பிணை மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இம்ரான் கானின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு | Imran Khan Bail Case Postponed

ஊழல் வழக்கு விசாரணை

பஞ்சாப் மாகாண பொலிஸார் இம்ரான் கான் மீதும், அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மீதும் கொலை, பயங்கரவாதம் உட்பட 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 9 ஆம் திகதி தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாக சென்றிருந்தபோது அந்த நாட்டின் துணை இராணுவம் அவரை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.