குண்டு துளைக்காத தலைக்கவசத்துடன் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இம்ரான்கான்

Pakistan Imran Khan
By Fathima Apr 05, 2023 11:46 PM GMT

குண்டு துளைக்காத தலைக்கவசத்துடன் பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் லாகூரில் அவரது ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான வழக்குகளில், பிணையை நீட்டிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளார்.

குண்டு துளைக்காத தலைக்கவசத்துடன் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இம்ரான்கான் | Imran Khan Appeared In Court

இவர் குண்டு துளைக்காத தலைக்கவசத்துடன், தலை, முகத்தை மூடியவாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதுடன், இது குறித்த படங்கள் மற்றும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பிரதமராக இருந்த போது பரிசுகள் மூலம் கிடைத்த வருவாயை கணக்கு காட்டவில்லை என்ற வழக்கில், இம்ரான்கான் மீது கைது வாரண்ட் பிறபிக்கப்பட்ட நிலையில் , இம்ரான்கான் வீட்டினை உடைத்து சோதனை செய்த போது ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.