இலங்கையின் சுற்றுலாத் துறையில் மீள் எழுச்சி : வருவாயாக பெறப்பட்ட பெருந்தொகை டொலர்கள்
இந்த ஆண்டு முதல் 11 மாதங்களில் 1.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையின் சுற்றுலாத்துறை வருவாயாக பெற்று மீள் எழுச்சி கண்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த வருவாய் கடந்த ஆண்டு முதல் 11 மாதங்களுக்கான சுற்றுலாத் துறை வருவாயை விட 55% அதிகமாக காணப்படுகின்றது.
சுற்றுலாத்துறையில் மீள் எழுச்சி
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை இலங்கையின் சுற்றுலாத்துறை ஈட்டியுள்ளது.
இந்த ஆண்டு 1.27 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதோடு அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, ரஷ்யா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளை சேர்ந்தோராவர்.
உதிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக சில ஆண்டுகளாக துவண்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறையானது தற்போது ஒரு மீள் எழுச்சி பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.