இறக்குமதி வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் : ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

President of Sri lanka Ministry of Finance Sri Lanka Japan Presidential Update
By Rakshana MA Mar 20, 2025 04:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக வழங்கப்படும் ஜப்பானின் ஏற்றுமதி பரிசோதனை சான்றிதழைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்களுக்கு அந்த வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இதனால் சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று(19) வெளியிடப்பட்டுள்ளது.

காஸா மக்களுக்காக துஆ..!

காஸா மக்களுக்காக துஆ..!

விடுவிப்பதில் சிக்கல்

இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த வாகனங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான பரிசோதனை உறுதிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளும் பணியகத்துக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் : ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் | Imported Vehicles Price Today In Sri Lanka

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜப்பான் உள்ளிட்ட சகல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பரிசோதனை சான்றிதழை ஏற்றுக் கொள்ளும் வகையிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பம் மெரஞ்சிகே தெரிவித்தார். 

நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு

நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு

பிளாஸ்டிக் கழிவு வழங்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும்! புதிய திட்டம் நடைமுறைக்கு

பிளாஸ்டிக் கழிவு வழங்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும்! புதிய திட்டம் நடைமுறைக்கு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW