கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Government
By Nafeel Apr 20, 2023 07:48 PM GMT
Nafeel

Nafeel

2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக அழைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு விண்ணப்பங்களை

https://g6application.moe.gov.lk/#/ என்ற இணைய தளத்தின் ஊடாக முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.