இலங்கையில் புதுமணத்தம்பதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Ministry of Health Sri Lanka Pregnancy Wedding
By Mayuri Jul 11, 2024 04:44 AM GMT
Mayuri

Mayuri

குழந்தைகளைப் பராமரித்தல், தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற விடயங்களில் போதிய தெளிவு இல்லாத காரணத்தினால் புதுமணத்தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து விசேட வகுப்புகளை நடத்துவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

டிசம்பரில் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டம்

இதனடிப்படையில் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதுமணத்தம்பதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Important Notice For Newly Married In Sri Lanka

அத்துடன், பிறப்பு முதல் 5 வயது வரையிலான காலப்பகுதியில் குழந்தைகளின் ஆரம்பக் குழந்தைப் பருவத்தை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியமானது என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமலகே தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW