சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jun 14, 2023 12:20 AM GMT
Fathima

Fathima

தனியார் துறையினரால் சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களின் திறன் குறைபாடு காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு | Important Notice For Driving License

இதன் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் இருந்து அட்டை பிரிண்டர்களை பெற்று ஒரு அட்டைக்கு 150 ரூபா செலுத்தும் உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.