வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும் பணம்! பொதுமக்களுக்கான அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜூன் மாதக் கொடுப்பனவுகள் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொடுப்பனவுகள் இன்று (18) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிபெற்ற பயனாளி குடும்பங்களுக்கான கொடுப்பனவு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 1,373,248 பயனாளி குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு கிடைக்கவுள்ளது.
இதற்காக அரசாங்கத்தினால் 1090 கோடியே 48 இலட்சத்து 1250 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையானது இன்று பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும்.
இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள பொதுமக்கள் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.