கல்முனையில் தனியார் வகுப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவித்தல்

Ampara Education Iftar
By Fathima Apr 11, 2023 03:25 PM GMT

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம் 01 தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும்  2023.04.11 ம் திகதி தொடக்கம் 2023.04.24 ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார்.

கல்முனையில் தனியார் வகுப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவித்தல் | Important News For Educational Institutions

சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளினைக் கொண்ட இம்மாதமானது அதிக உஷ்ணம் நிறைந்ததாக காணப்படுகின்றது. 

கல்முனையில் தனியார் வகுப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவித்தல் | Important News For Educational Institutions

இருந்தபோதிலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதானது மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக மத அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து தமக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.