இலங்கையின் முக்கிய காணிகள் வெளிநாட்டு நிறுவனம் வசம்!அமைச்சரவை அங்கீகாரம்

By Fathima Jun 27, 2023 09:42 PM GMT
Fathima

Fathima

அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு காணி ஒன்றை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குவதற்காக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கெப்பிட்டல் இன்வஸ்மன்ட் நிறுவனத்தினால் 25 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மவுசாகலை பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காணியை அண்மித்துள்ள காணியொன்றையும், மவுசாகலை நீர்த்தேக்கத்திலுள்ள சிறிய தீவொன்றை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.