இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணை : வெளியான தகவல்

Sri Lanka Sri Lanka Police Investigation Tourism Passport
By Rakshana MA Dec 04, 2024 06:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 05 மில்லியன் “இ-பாஸ்போர்ட்” கொள்வனவுக்கான டெண்டர் வழங்கப்பட்ட விதம் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது கடவுச்சீட்டுக் கொள்வனவு தொடர்பான டெண்டர் வழங்கப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (03.12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய கொள்வனவு விசாரணைக்குழு

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்ததாவது,

ஐந்து மில்லியன் இ-பாஸ்போர்ட்களை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்வனவு குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணை : வெளியான தகவல் | Important Info On E Passport Updates

மேலும் இது தொடர்பான விசாரணை அவதானிப்புகளை சமர்ப்பிக்க அந்த குழு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதுடன் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்கான திகதியை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் ரி.ஐ.டிக்கு அழைப்பு!

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் ரி.ஐ.டிக்கு அழைப்பு!

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW