உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறவும்: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Apr 28, 2024 02:46 AM GMT
Fathima

Fathima

இலங்கையின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முறையான வைத்திய ஆலோசனைகளை மேற்கொள்வதன் மூலம் ஆஸ்துமா நோயைத் தடுக்க முடியும் என இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறவும்: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Important Announcement Srilanka Peoples

ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகள்

ஆஸ்துமா கட்டுப்படுத்தக்கூடிய நோய் என்றும் , ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலக ஆஸ்துமா தினம் மே 7 அன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், உலகம் முழுவதும் ஆஸ்துமாவினால் ஆண்டுக்கு 5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.