இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும்! வைத்தியர் ஹரித அலுத்கே

Lankasri Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jun 12, 2023 09:21 PM GMT
Fathima

Fathima

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும், நாளாந்த நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் தனிநபர்கள் போதுமான ஓய்வு பெறுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும்! வைத்தியர் ஹரித அலுத்கே | Important Announcement Of Health Ministry

யாராவது பணியில் இருந்தால் அல்லது பாடசாலைக்குச் சென்றால், அவர்கள் சில நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும். இரண்டாவது மிக முக்கியமான விடயம் திரவ உட்கொள்ளளவு அதிகரிப்பது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த பெரசிட்டமோல் மருந்தை உட்கொள்ளலாம். எவ்வாறாயினும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் டிஸ்பிரின், அஸ்பிரின் அல்லது இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.