கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
2022ஆம் ஆண்டு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 31/12/2021 அன்று பணியை முடித்து, ஆசிரியர் இடமாறுதல் கடிதம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 12ஆம் திகதிக்குள் பணியிடத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ஏதேனும் ஒரு ஆசிரியர், மேன்முறையீட்டை முன்வைக்க வேண்டுமாயின், சேவைக்கு அறிக்கையிட்டப் பின்னர் குறித்த பாடசாலை அதிபர் ஊடாக ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிக்கலாம் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், இதற்காக கல்வி அமைச்சின், ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க அவசியமில்லை.
மேன்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தான, தீர்மானங்கள் விரைவில் அறியத்தரப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.