பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change Weather
By Fathima Aug 27, 2023 11:21 AM GMT
Fathima

Fathima

நாட்டில் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (28.08.2023) முதல் அடுத்த சில நாட்கள்  மழையுடனான காலநிலை காணப்படும் என எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Important Announcement Department Of Meteorology

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கக் கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத்  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

சூரியன் உச்சம் கொடுக்கும்

இதேவேளை, நாளை (28.08.2023) தொடக்கம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை நண்பகல் 12.11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.