மக்காவில் கனமழையிலும் வழிபாட்டை தொடர்ந்த இஸ்லாமியர்கள்

Iftar
By Fathima Apr 11, 2023 11:28 PM GMT

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரை, (ஹிஜ்ரி 1441) இஸ்லாமிய மாதமான, ஹஜ் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், மக்காவில் பெய்த கன மழையையும் பொருட்படுத்தாது இஸ்லாமியர்கள் வழிபாட்டில் ஈடுபட்டமை தற்போது சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்படுகின்றது.  

மக்காவில் கனமழையிலும் வழிபாட்டை தொடர்ந்த இஸ்லாமியர்கள் | Importance Of Makkah Worship

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி பெய்த கன மழைக்கு மத்தியிலும், இஸ்லாமியர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்சி மக்கா பகுதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.