தரமற்ற மருந்து இறக்குமதி : முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

CID - Sri Lanka Police Sri Lanka Politician Sri Lanka Naseer Ahamed Nalin Fernando
By Rakshana MA Nov 27, 2024 02:32 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கைக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் 4 முன்னாள் அமைச்சர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், இன்று (27) முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட் மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

நான்கு மத ஒற்றுமையுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள பள்ளி வாசல்

நான்கு மத ஒற்றுமையுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள பள்ளி வாசல்

முன்னர் நடத்தப்பட்ட விசாரணை

இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இது தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

தரமற்ற மருந்து இறக்குமதி : முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் | Import Of Substandard Drugs C I D Inquiry Calls

மேலும், தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம அனுமதியளித்துள்ளார்.

இந்த உத்தரவானது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சவை

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சவை

தொடரும் சீரற்ற காலநிலை! முல்லைத்தீவின் தற்போதைய நிலவரம்

தொடரும் சீரற்ற காலநிலை! முல்லைத்தீவின் தற்போதைய நிலவரம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW