நான்கு மத ஒற்றுமையுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள பள்ளி வாசல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கொழும்பு – அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையில் ஜும்மா பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவானது இன்று (27) நடைபெற்றுள்ளது.
மேலும், பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம். எச். ஷேஹுத்தீன் (மதனி) கலந்து திறந்து வைத்துள்ளார்.
மத ஒற்றுமை
தொடர்ந்தும் கெளரவ அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜாவும் அனைத்து பீட பீடாதிபதிகளும் மூவின மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நான்கு மதத்தினருக்கும் சரிசமமாக தலா 2 ஏக்கர் காணி, அவரவர் மத ஸ்தலங்களை அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா ஒதுக்கி கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 4 மத ஸ்தலங்களும் அமைக்கப்பட்டு மத நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |