மின்சார வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்
புலம்பெயர் தொழிலாளர்களால், இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பப்பட்ட பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மொத்தம் 900 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உரிமங்களை வழங்குவதன் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்க மின்சார வாகன உரிம திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிட்டத்தட்ட 900 மின்சார வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி
இந்த முயற்சியின் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன என்றும் கூறினார்.
இந்தநிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வங்கிக்கடன் கடிதங்களை வழங்குவதற்கான காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி மூன்று தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் பதவிக்காலத்தில் இந்த அதிகாரிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் பற்றி தமக்கு தெரியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.