கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு நீக்கம்: விலை அதிகரிக்கும் சாத்தியம்

Sri Lanka
By Nafeel May 07, 2023 02:35 PM GMT
Nafeel

Nafeel

கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஜனவரியில் கோதுமை மாவுக்கான சுங்க இறக்குமதி வரி கிலோவுக்கு 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள முடிவை நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சுங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர், மாதம் அப்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவுக்கு நடைமுறையில் இருந்த 36 ரூபா என்ற ஒருங்கிணைந்த வரியை, வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் என்ற விசேட பண்ட வரியாக மாற்றியது.

இதன் காரணமாக பலகோடி ரூபா வருமானம் திறைசேரிக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வரி விலக்கு நீக்கப்பட்டதையடுத்து, கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.