இஸ்ரேல்-காசா போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்
Israel
Palestine
Israel-Hamas War
By Chandramathi
மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவிகளை அணுக கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடா வாக்களிக்கவில்லை
தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத தாக்குதலுக்கு வௌிப்படையான கண்டனத்தை தெரிவித்திருந்த கனடா இதில் வாக்களிக்கவில்லை.