தாதியர் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளின் செயற்பாட்டிற்கு ஏற்படபோகும் பாதிப்பு
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
By Fathima
தாதியர் சேவையில் 30,000இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மெதவத்த தெரிவித்துள்ளார்.
தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு
மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மூன்று வருடங்களுக்குள் வைத்தியசாலையின் செயற்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பினை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.