ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்: பொலிஸார் விசேட நடவடிக்கை
CID - Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Sri Lanka Economic Crisis
Sri Lanka Police Investigation
By Dharu
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாளை தயாரித்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு போலி நாணயத்தாளை தயாரித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
அத்துருகிரிய கொரதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொள்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |