சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு!

Sri Lanka Kalmunai
By Fathima Apr 16, 2023 08:22 PM GMT

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் தலைவியும், பாடசாலை அதிபருமான எம்.சி. றிப்கா அன்சார் தலைமையில் சனிக்கிழமை (15) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை தலைவர் மௌலவி அஷ்செய்க் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி) ரமழான் சிந்தனையை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி ஏ.எல்.எம்.மைமூனா, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கல்முனையின் மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாகிப், ஓய்வு பெற்ற சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்.சலீம், சிம்ஸ் கெம்பஸ் தவிசாளர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா உள்ளிட்டவர்களுடன் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர், மாவட்ட பொறியலாளர் ஏ.எம். சாகீர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.எம். சகறூன் உள்ளிட்ட வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கல்வியாளர்களும், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஓய்வு பெற்ற கல்வியதிகாரிகள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



GalleryGalleryGalleryGalleryGalleryGallery