இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி
மன்னாரிலுள்ள இரு மீனவ சமூகங்களுக்கிடையில் இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் இப்தார் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், நேற்று(25) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்தார் நிகழ்வு
இதன்போது இரு மீனவ சமூகங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை, சகோதரத்துவத்தை மேம்படுத்தல் மற்றும் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு அதிகப்படுத்தல் ஆகியவற்றுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இப்தார் நிகழ்வுக்கு முசலி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் இளம் மீனவர்களும் தமிழ் இளம் மீனவர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





