சாய்ந்தமருதில் நாபீர் அறக்கட்டளையின் இப்தார் நிகழ்வு (Video)

Sri Lanka Iftar
By Farook Sihan Apr 11, 2023 08:00 AM GMT

வருடாவருடம் நாபீர் அறக்கட்டளை நடத்தும் புனித ரமழான் நோன்பின் பிரமாண்டமான இப்தார் நிகழ்வு அம்பாறை, சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நேற்றைய தினம் (10.04.2023) சமூக செயற்பாட்டாளர் பாயிஸ் கரீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நாபீர் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் ECM நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பொறியியலாளருமான அல் ஹஜ் உதுமான்கண்டு நாபீரின் முழுமையான அனுசரணையுடனும் வழிகாட்டலின் கீழும் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதான மார்க்க சொற்பொழிவை அஷ்செய்க் எம்.எச்.ஆஷிக் இலாகி வாரி நிகழ்த்தியுள்ளார்.


துஆ பிரார்த்தனை

இதன்போது நிகழ்வின் ஏற்பாட்டாளர் அல் ஹஜ் உதுமான்கண்டு நாபீரின் மரணித்த தந்தையாருக்காக துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், அல் ஹஜ் உதுமான்கண்டு நாபீர் அவர்களது சார்பில் அவரது மகன், ECM நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டதுடன், சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery